Rangaraj Pandey Open Statement: “4 மணி ஆச்சுனா ஸ்டார் ஹோட்டல் சாப்பாடு, வறுத்த முந்திரி!” தலைமைச் செயலகத்தில் நடந்த கூத்து… இப்போ எல்லாம் மாறிடுச்சு! ரங்கராஜ் பாண்டே உடைத்த புதிய ரகசியம்!

தமிழக அரசியல் மற்றும் நிர்வாகத் திறமை குறித்து எப்போதுமே அதிரடியான கருத்துக்களைப் பகிர்ந்து வரும் மூத்த பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே, தற்பொழுது தலைமைச் செயலகத்தில் முந்தைய ஆட்சிக்கும் தற்போதைய ஆட்சிக்கும் இடையே ஏற்பட்டுள்ள நிர்வாக மாற்றங்கள் மற்றும் அங்கு நடந்த சில ஆடம்பரக் கூத்துக்கள் குறித்த அதிரடியான புதிய தகவல் ஒன்றை உடைத்துள்ளார்.

அவர் பகிர்ந்துள்ள தகவலின்படி, முந்தைய ஆட்சிக் காலத்தில் தலைமைச் செயலகத்தில் உள்ள மின்வாரிய அமைச்சர் கட்டுப்பாட்டில் இருந்த துறையில், அதிகாரிகள் மற்றும் முக்கியப் புள்ளிகள் யாரும் நேரத்திற்கு வேலைக்கு வரமாட்டார்கள் என்றும், தங்களுக்கு இஷ்டப்பட்ட நேரத்திற்கு வந்துவிட்டுத் தங்களது சௌகரியத்திற்குத் தான் வீட்டிற்குச் செல்வார்கள் என்றும் சாடியுள்ளார்.

நிர்வாகக் குறைபாடுகள் ஒருபுறம் இருக்க, உணவு விஷயத்தில் அங்குத் தனி ராஜபோகமே நடந்து வந்ததாக ரங்கராஜ் பாண்டே குறிப்பிட்டுள்ளார். தினமும் மாலை 4 மணி ஆகிவிட்டால் போதும், அந்தத் துறைக்கு வறுத்த முந்திரிப் பருப்பு, விதவிதமான சாண்ட்விச் மற்றும் சென்னையின் முன்னணி ஸ்டார் ஹோட்டல்களில் இருந்து விலை உயர்ந்த தேநீர் (Tea) என அனைத்தும் அடுக்கடுக்காக வந்து இறங்கிவிடும்.

அக்காலகட்டத்தில் மின்வாரியத் துறை சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் அளவிற்குப் பிரம்மாண்ட நஷ்டத்தில் ஓடிக் கொண்டிருந்த போதும், அமைச்சரின் துறையில் தின்பண்டங்களுக்கும் ஆடம்பரங்களுக்கும் பஞ்சமில்லாமல் ‘ஓஹோ’ என இந்தச் செலவுகள் அரசுப் பணத்தில் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருந்ததாக அவர் அக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  2026 தேர்தல்: "நல்லவர்களுக்கே உங்கள் வாக்கு!" - பாமக நிறுவனர் ராமதாஸ் அதிரடி வீடியோ வெளியீடு!

ஆனால், தற்பொழுது நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவிட்டதாக அவர் பாராட்டியுள்ளார். தற்போதைய புதிய நிர்வாக நடைமுறைகளின்படி, காலை 9 மணி ஆகிவிட்டால் போதும், சிறிய அதிகாரிகள் முதல் பெரிய புள்ளிகள் வரை அனைவரும் தங்களது இருக்கைகளில் சரியாக வந்து அமர்ந்து விடுகிறார்கள். நேரத்திற்கு வருவது மற்றும் போவது முழுமையாகக் கண்காணிக்கப்படுகிறது.

அதேபோல், முந்தைய ஆட்சியில் மாலை நேரத்தில் ஓடிவந்த அந்த விலை உயர்ந்த நட்சத்திர ஹோட்டல் சாண்ட்விச் மற்றும் வறுத்த முந்திரிப் பருப்பு சமாச்சாரங்கள் அனைத்தும் தற்பொழுது ஒட்டுமொத்தமாகக் காணாமல் போய்விட்டதாகவும் ரங்கராஜ் பாண்டே தனது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார். இவரின் இந்த அதிரடிப் பேச்சு தற்பொழுது சமூக வலைதளங்களில் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.