தமிழ்நாடு அரசியலில் தற்போது எதிர்பாராத திருப்பங்களும் பெரும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. நேற்று தஞ்சாவூரில் நடைபெற்ற போராட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதல்வர் விஜய் மற்றும் நடிகை திரிஷா இருவரையும் இணைத்து மிகவும் ஆபாசமாகப் பேசியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதற்குத் தவெகவினர் மட்டுமல்லாமல் பாஜக உள்ளிட்ட பல கட்சித் தலைவர்களும், கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். ஒருபுறம் தவெகவினர் போராட்டங்களை முன்னெடுத்துள்ள நிலையில், தஞ்சாவூரில் தவெக சார்பில் உதயநிதி மீது புகார் கொடுக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து உதயநிதியை கைது செய்யும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ள தமிழகக் காவல்துறை, சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்றுள்ளது. அங்குள்ள அவரது மனைவியும், குடும்பத்தாரிடமும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
மேலும், திமுக முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் போலீசாரிடம் பேசி வருகிறார். இதற்கிடையில், உதயநிதியை கைது செய்ய முயற்சிப்பதை அறிந்த திமுக வழக்கறிஞர்களும், ஆதரவாளர்களும், அவரது வீட்டின் முன்பு குவிந்து போலீசாருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அப்பகுதியில் கடும் பதற்றம் நிலவுகிறது. உதயநிதி கைது செய்யப்படுவாரா? என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சற்று நேரத்தில் வெளியாகும் என்பதால் வீட்டைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.





