சமூக வலைதளங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பகிரப்பட்டாலும், சில வீடியோக்கள் மட்டுமே நம்மைச் சிரிக்கவும், அதே சமயம் சிந்திக்கவும் வைக்கும். அந்த வகையில், தற்போது ஒரு பள்ளிச் சிறுவனின் வீடியோ இணையத்தையே தெறிக்கவிட்டு வருகிறது.
நடந்தது என்ன?: வீடியோவில், வகுப்பறையில் இருக்கும் சிறுவன் ஒருவனிடம் ஆசிரியர், “புக்கை எடுத்துப் படிடா” என்று கூறுகிறார். சாதாரணமாக மாணவர்கள் பயப்படுவார்கள் அல்லது அழுதுகொண்டே படிப்பார்கள். ஆனால், இந்தச் சிறுவனோ திடீரெனச் சத்தம்போட்டு அழத் தொடங்கி, ஆசிரியரை நோக்கி விரலை நீட்டி, “ஓவரா பேசாத.. பேசுன.. பள்ளிக்கூடத்தை ஒடச்சிடுவேன்” என்று ஆவேசமாக மிரட்டுகிறான். இதைக் கேட்டவுடன் வகுப்பறையில் இருந்த மற்ற மாணவர்கள் அனைவரும் விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினர்.
Wholesome Kalesh b/w Student and Teacher (When the teacher asked the kid to study, he replied, “i will break your school!” and the whole class burst out laughing) pic.twitter.com/iJBhvibY8l
— Ghar Ke Kalesh (@gharkekalesh) April 29, 2026
நெட்டிசன்களின் ஆதங்கம்: இந்த வீடியோவைப் பார்த்துப் பலர் சிரித்தாலும், சமூக ஆர்வலர்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் இது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. “பிஞ்சு வயதிலேயே குழந்தைகளுக்கு இவ்வளவு கோபம் வருவது ஆரோக்கியமானது அல்ல” என்று அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, “இந்த போன் தான் எல்லாத்துக்கும் காரணம்” என்றும், குழந்தைகள் மொபைல் போனில் பார்க்கும் வன்முறை மற்றும் சினிமா வசனங்களின் தாக்கமே இதுபோன்ற பேச்சுகளுக்குக் காரணம் என்றும் நெட்டிசன்கள் தங்கள் ஆதங்கத்தைக் கொட்டி வருகின்றனர்.
பிள்ளைகளின் மழலைப் பேச்சாக இதைக் கடந்து போவதா அல்லது அவர்களின் வளர்ப்பு முறையில் கவனம் செலுத்த வேண்டிய நேரமா? என்ற கேள்வியுடன் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.





