மும்பை மாநகரில் சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’ (Reels) எடுக்கும் மோகம், தற்போது விபரீத எல்லைகளைத் தொட்டுள்ளது. தனது பிறந்தநாளை வித்தியாசமாகக் கொண்டாடுகிறேன் என்ற பெயரில் பொதுமக்களுக்குப் ஆபத்தை விளைவித்த வாலிபர் ஒருவரை மும்பை போலீசார் தற்போது கம்பி எண்ண வைத்துள்ளனர்.
மும்பையைச் சேர்ந்த ஒரு இளைஞர், தனது 33-வது பிறந்தநாளை முன்னிட்டு நள்ளிரவில் மக்கள் நடமாட்டம் உள்ள ஒரு பிரதான சாலையில் பெட்ரோலை ஊற்றி ’33’ என எழுதியுள்ளார். பின்னர் அதற்குத் தீ வைத்து, அந்த நெருப்பு கொழுந்துவிட்டு எரிவதை மிக நேர்த்தியாக வீடியோ எடுத்துச் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
जन्मदिनाचा रील बनवण्यासाठी, मुंबईत ३३ वर्षीय कार डीलर फहाद शेख याने गोरगाव पश्चिम येथे रस्त्यावर पेट्रोल ओतून ‘३३’ आकारात आग लावली ! पोलिसांनी त्याला अटक केली आहे.
Mumbai’s 33-year-old car dealer Fahad Shaikh poured petrol on a public road in Goregaon West & set it on fire in… pic.twitter.com/URuiMdCppX
— नेत्वा धुरी NETWA DHURI (@netwadhuri) April 28, 2026
போலீசார் அதிரடி கைது: இந்த வீடியோ இணையதளங்களில் மிக வேகமாகப் பரவியது. நெருப்பு எரிந்து கொண்டிருக்கும்போதே அருகில் வாகனங்கள் செல்வதும், அந்த இளைஞர் எந்தவித அச்சமும் இன்றி போஸ் கொடுப்பதும் வீடியோவில் பதிவாகியிருந்தது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், பொது இடத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட அந்த இளைஞர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீசாருக்குப் புகார்களைத் தட்டினர்.
வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே களத்தில் இறங்கிய மும்பை போலீசார், அந்த இளைஞரின் இருப்பிடத்தைக் கண்டறிந்து அவரை அதிரடியாகக் கைது செய்தனர். “சமூக வலைதளப் புகழுக்காகச் செய்யப்படும் இதுபோன்ற முட்டாள்தனமான செயல்கள் மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று போலீசார் எச்சரித்துள்ளனர். லைக்குகளுக்காகச் சட்டத்தைக் கையில் எடுத்த அந்த இளைஞர், இப்போது தனது பிறந்தநாளைச் சிறையில் கழிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.





