மக்களை தவிக்க விட்டு ஓடியது யார்? CM விஜய்க்கு கனிமொழி எம்பி கொடுத்த நெத்தியடி பதிலடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் மாண்புமிகு முதலமைச்சருமான சி. ஜோசப் விஜய் கரூரில் ஆளும்கட்சியான திமுகவை விமர்சித்து பேசிய பேச்சுக்கு, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பி தற்போது மிகக் கடுமையான மற்றும் காரசாரமான பதிலடியைக் கொடுத்துள்ளார். “ஆபத்தான நேரத்தில் மக்களைத் தவிக்க விட்டுவிட்டு அங்கிருந்து ஓடிப்போனவர்கள் யார் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும்” என்று அவர் மிக நேரடியாகத் தாக்கிப் பேசியுள்ளார்.

எனக்கு கேட்காத விஷயத்திற்கு நான் எப்படி பதில் சொல்ல முடியும்?

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி எம்பியிடம், கரூரில் முதல்வர் விஜய் பேசியது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு பதிலளித்த அவர், “எனக்கு கேட்காத ஒரு விஷயத்துக்கு நான் எப்படி பதில் சொல்ல முடியும்? அவர் என்ன பேசினார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் கரூர் மாநாட்டு நெரிசல் சம்பவத்தைப் பொறுத்தவரை, காவல்துறை கொடுத்த தகவலின் அடிப்படையில் அந்தத் திட்டத்தைக் கூட ரத்து செய்திருக்கலாம். பாதிக்கப்பட்டவர்களைச் சென்னையில் போய் பார்த்திருக்கிறார்கள், பல உதவிகளைச் செய்திருக்கிறார்கள்” என்று ஆரம்பத்திலேயே தவெக தரப்பைச் சாடினார்.

அமைச்சர்களின் செயல்பாடுகளால் மக்களுக்குச் சிரமம்

தொடர்ந்து இந்த ஆட்சியில் உள்ளவர்கள் மற்றும் அமைச்சர்களின் நடவடிக்கைகள் குறித்துப் பேசிய கனிமொழி, “தொடர்ந்து இந்த ஆட்சியில் இருக்கக்கூடிய அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் தாங்கள் எந்த இடத்திற்குப் போகக் கூடாதோ, அங்கெல்லாம் தொடர்ந்து போய் அங்கிருக்கும் மக்களுக்குப் பெரிய சிரமங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். பள்ளிக்கூடங்களுக்குக் கூட தேவையின்றிச் சென்று அங்கிருக்கக்கூடிய குழந்தைகளின் மனநிலை பாதிக்கப்படக்கூடிய அளவிற்கு, அவர்களுக்கு மன உளைச்சலைத் தரக்கூடிய அளவிற்குத் தொடர்ந்து நடந்து கொள்கிறார்கள்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  திருமாவளவன் ஆவேசம்... வைகோ தூக்கலான கிண்டல்! தி.மு.க - த.வெ.க-வை ஒரே அணியில் சேர்க்கும் விசிக-வின் மாஸ்டர் பிளான் இதுதான்!

இவற்றையெல்லாம் கடந்து இன்று முதலமைச்சரே (விஜய்) நேரடியாக அதைச் செய்யும்போது, இந்த ஆட்சி எதை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது என்கிற ஒரு பெரிய கேள்வி எல்லார் மனதிலும் எழத்தான் செய்கிறது” என்று தவெக அரசு மீது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

பொறுப்பில்லாமல் ஓடியவர்கள் யார் என்று மக்களுக்குத் தெரியும்!

அரசியலில் உணர்வுப்பூர்வமான அணுகுமுறை (Sensitivity) மிகவும் முக்கியம் என்று குறிப்பிட்ட கனிமொழி எம்பி, “அரசியலில் இருக்கும் ஒவ்வொருவருக்குமே தங்களுக்கு என்று ஒரு பொறுப்பு (Responsibility) இருக்கிறது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். நான் இதைப் பற்றி அதிகமாக இப்போது பேச விரும்பவில்லை. ஏனா, இது ஒரு விசாரணை வளையத்தில் இருக்கக்கூடிய விஷயம்.

அட்லீஸ்ட் நானாவது இந்த விஷயத்தில் ஒரு பொறுப்புள்ள அரசியல்வாதியாகப் பேசாமல் இருப்பதுதான் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால், அந்த இக்கட்டான அவசர நேரத்தில் கூட மக்களோடு நின்றவர்கள் யார்? மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்தவர்கள் யார்? மக்களைத் தவிக்க விட்டுவிட்டு அங்கிருந்து பயந்து ஓடிப்போனவர்கள் யார்? என்பது இந்த நாட்டு மக்களுக்கு மிக நன்றாகவே தெரியும்” என்று தவெக தலைவர்களுக்கு அனல் பறக்கும் பதிலடி கொடுத்துள்ளார். அமைச்சர்கள் வெளிநாடு ஓடுவதாகக் கூறப்படும் விமர்சனங்களுக்கும் அவர் தனது பாணியில் எதிர்வினையாற்றியுள்ளார்.