“தனி ஆவர்த்தனம் செய்ய நினைத்துத் தனிமைப்பட்டு நிற்கிறார் முதலமைச்சர்!”: மேகதாது விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் காரசாரமாக எக்ஸ் தளத்தில் நக்கலோ நக்கல்ஸ்!

மேகதாது அணை விவகாரத்திலும், காவேரி நீர் பங்கீட்டிலும் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முயன்று தமிழ்நாடு முதலமைச்சர் தனிமைப்பட்டு நிற்கிறார் என்று திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மிகக் காரசாரமாகக் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்துத் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (ட்விட்டர்) சமூக வலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளப் பதிவில், மாநிலத்தின் வாழ்வாதாரப் பிரச்சனையில் முதலமைச்சரின் தன்னிச்சையான நடவடிக்கைகள் தோல்வியடைந்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவது எவ்விதப் பயனும் அளிக்காது என்றும், தமிழ்நாடு முதலமைச்சர் அங்குச் செல்ல வேண்டாம் என்றும் அரசியல் கட்சித் தலைவர்களும், விவசாயிகள் சங்கத்தினரும் ஏற்கனவே எச்சரித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தர முடியாது என்பதில் உறுதியாக இருக்கும் ஒரு மாநிலத்துடன் சட்டரீதியாக மட்டுமே போராட வேண்டும் என்பதே கடந்தகால அனுபவங்கள் கற்றுத் தந்த பாடம் என்றும், ஆனால் கர்நாடகம் சென்றால் காவிரியைக் கையோடு கொண்டுவந்து விடலாம் என்ற எண்ணத்தில் நமது எச்சரிக்கைகளை மீறி முதலமைச்சர் தூது அனுப்பினார் என்றும் அவர் சாடியுள்ளார்.

தற்போது காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டதும், “நீங்கள் இப்போதைக்கு வர வேண்டாம்” என்று கர்நாடகா கேட்டைச் சாத்திவிட்டதாகக் குறிப்பிட்ட மு.க.ஸ்டாலின், இதுபோன்ற சூழல்களைத் தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் முன்பே கணித்து எச்சரித்ததாகத் தெரிவித்துள்ளார். நமது முதலமைச்சரை வர வேண்டாம் என்று மறுத்துவிட்டு, ஆகஸ்ட் 2-ஆம் தேதி கர்நாடக முதலமைச்சர் அம்மாநிலத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டித் தங்கள் மாநிலத்தின் ஒற்றுமையை நிரூபித்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  "எங்கு ஒளிந்து கொண்டிருக்கிறார்?" – தொடரும் காவல் மரணங்கள்.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் காரசார கேள்வி!

இனியேனும், தமிழ்நாட்டின் உயிர்ப் பிரச்சனையான காவிரி விவகாரத்தைக் கூட்டு ஆலோசனைகளோடும், முதிர்ச்சியோடும் முதலமைச்சர் அணுக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள மு.க.ஸ்டாலின், “தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவது எப்போது? முடியுமா? முடியாதா?” என்று முதலமைச்சருக்கு நேரடி சவால் விடுத்துக் கேள்வி எழுப்பியுள்ளார்.