சட்டசபை நேரலை கட், விவசாயிகள் மீது தடியடி! கொதித்தெழுந்த உதயநிதி ஸ்டாலின்! “விவசாயியாக மாற இன்னொரு ஜென்மம் தேவையில்லை, இப்பவே ஆகலாம்!” தவெக அரசின் பயிர்க்கடன் தள்ளுபடி ஏமாற்று வேலை என சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் காரசாரம்!

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரின் இன்றைய அமர்வில், திருவள்ளூர் ஆலை விபத்து தொடர்பாக ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சியான அதிமுகவுக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தால் அவையில் பெரும் பரபரப்பு நிலவியது.

சட்டப்பேரவையில் இன்று விதி 110-ன் கீழ் அறிக்கை தாக்கல் செய்யத் தொழிலாளர் நலத்துறை அமைச்சருக்குச் சபாநாயகர் அனுமதி அளித்தார். அதன்படி அமைச்சர் வாசித்த அறிக்கையில், “திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கன்னியார்பேர் கிராமத்தில் உள்ள ‘சென்ட் பீட்டர் அண்ட் பால் சீஃபுட் எக்ஸ்போர்ட்ஸ்’ தனியார் தொழிற்சாலையில், ஐஸ் பிளாக்ஸ் ஜெனரேட்டர் மெஷினுக்குச் செல்லும் பைப்லைன் வால்வில் ஏற்பட்ட விபத்தால் அமோனியா வாயு கசிந்துள்ளது. இந்த விபத்தில் மொத்தம் 74 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 15 பேர் அரசு மருத்துவமனைகளிலும், 27 பேர் தனியார் மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் (ICU) உள்ளனர். துரதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது” என்று தெரிவித்தார்.

விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள முதலமைச்சர் சா. ஜோசப் விஜய், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 2 லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும், உடல்களைச் சொந்த மாநிலத்திற்கு அனுப்பும் செலவை அரசே ஏற்கும் என்றும், இஎஸ்ஐ (ESI) மற்றும் பிஎஃப் (PF) பலன்களை விரைந்து வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 6,669 அபாயகரமான தொழிற்சாலைகளை உடனடியாகக் குழு அமைத்து ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  புதிய ஸ்கூட்டர்கள் அறிமுகம்! ஏப்ரிலியா SR 175 மற்றும் ஆம்பியர் Reo VYB மார்க்கெட்டில் அதிரடி எண்ட்ரி! ரேஸ் பைக் போல மிரட்டும் ஏப்ரிலியா ஸ்போர்ட்ஸ் ஸ்கூட்டர்! லைசென்ஸ், ஆர்.டி.ஓ ரெஜிஸ்ட்ரேஷன் தேவையில்லாத பட்ஜெட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்! விலை மற்றும் முழு விபரம் உள்ளே!

அமைச்சர் 110 விதியின் கீழ் அறிக்கை வாசித்ததைத் தொடர்ந்து, அது குறித்து அவையில் தங்களின் கருத்துக்களைப் பேச அனுமதிக்க வேண்டும் என அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக (ADMK) உறுப்பினர்கள் வலியுறுத்தினர். தங்களுக்கு அவையில் பேச அனுமதி மறுக்கப்படுவதாகக் கூறி அதிமுகவினர் தொடர்ந்து முழக்கமிட்டனர்.

இதற்குப் பதிலளித்த சபாநாயகர், “அலுவல் ஆய்வு குழு முடிவின்படி இன்று கேள்வி நேரமும், பூஜ்ஜிய நேரமும் கிடையாது. விதி 110-ன் கீழ் அறிக்கை வாசித்த பிறகு விவாதம் நடத்த அவையில் இடமில்லை. உங்களின் கோரிக்கைகள் மற்றும் உரிமை மீறல் மனுக்கள் எனது ஆய்வில் உள்ளன, அவை முடிவதற்குள் அதற்குப் பேச வாய்ப்பளிப்பேன்” என்று திட்டவட்டமாகக் கூறினார். ஆனால் சபாநாயகரின் பதிலை ஏற்க மறுத்த அதிமுக உறுப்பினர்கள், அவையில் தங்களைப் பேச அனுமதிக்காததால் சபாநாயகரைக் கண்டித்து அவையை விட்டு முழுமையாக வெளிநடப்பு செய்தனர். அவர்களைத் தொடர்ந்து அவைக்கு வெளியே வராண்டாவில் கோஷம் போட்ட உறுப்பினர்களை வெளியேற்றுமாறு அவை காவலர்களுக்குச் சபாநாயகர் உத்தரவிட்டார்.

இதற்கிடையே, அவையில் உறுப்பினர்களின் நடத்தை குறித்து மிக முக்கியமான குறிப்பு ஒன்றையும் சபாநாயகர் வெளியிட்டார். “சட்டமன்ற நடவடிக்கைகள் தற்பொழுது நேரலையாக ஒளிபரப்பப்படுவதால் உறுப்பினர்கள் மிகுந்த கண்ணியத்துடன் செயல்பட வேண்டும். கடந்த வெள்ளிக்கிழமை அவையில் சில உறுப்பினர்கள் மற்றவர்களைக் கேலி செய்யும் வகையில் செய்த முக பாவனைகள் மற்றும் சைகை மொழிகள் சமூக வலைதளங்களில் பரவி அவையின் மாண்பைக் கெடுத்துள்ளன. இனிவரும் காலங்களில் நேரலையில் இது போன்ற கண்ணியக் குறைவான செயல்களில் ஈடுபட்டால், அது அவையின் உரிமை மீறலாகக் கருதப்பட்டுச் சம்பந்தப்பட்ட உறுப்பினர் மீது கடுமையான சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்தார்.