கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசல் மற்றும் விபத்து தொடர்பாகத் தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் பேசியுள்ள கருத்துக்கள், அப்போதைய காவல்துறையின் அதிகாரப்பூர்வ விளக்கத்துடன் முற்றிலும் முரண்பட்டுப் புதிய அரசியல் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. கரூரில் கூட்டம் கூட்டம் கட்டுக்கடங்காமல் அதிகரித்தது தொடர்பாக அங்கிருந்த உள்ளூர் போலீஸ் தங்களிடம் எவ்வித முன் எச்சரிக்கையையும் தெரிவிக்கவில்லை என்றும், தங்களை முறையாக அலர்ட் செய்திருக்கலாம் என்றும் முதல்வர் விஜய் தற்போது பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், இந்த விபத்து நடந்த சமயத்தில் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த டேவிட்சன் தெய்வாசீர்வாதம் வெளியிட்ட உண்மை விபரங்கள் மற்றும் விளக்க அறிக்கை, விஜயின் இந்த தற்போதைய பேச்சுக்கு முற்றிலும் மாறாக அமைந்துள்ளது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
விபத்து நடந்த தினத்தன்று கரூரில் எதிர்பார்த்ததை விடப் பல மடங்கு கூட்டம் அதிகமாக இருந்ததால் நிலைமையைக் கட்டுப்படுத்த போலீஸ் நினைத்திருந்தால் அந்த மீட்டிங்கையே ரத்து செய்திருக்க முடியும் என்று காவல்துறை வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உண்மையில், கரூர் டவுன் டிஎஸ்பி மேம்பாலப் பகுதியிலிருந்து தவெக ஆர்கனைசர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் தொடர்ந்து பேசியபடிதான் வந்துள்ளார். முக்கிய ஸ்பீக்கிங் பாயிண்டிற்கு சுமார் 50 மீட்டருக்கு முன்பாகவே வாகனத்தை நிறுத்தி, கூட்டம் மிக அதிகமாக இருப்பதால் இங்கேயே பேச்சை முடித்துக் கொள்ளலாம் என டிஎஸ்பி தரப்பில் எச்சரித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த எச்சரிக்கையை தவெக மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் முற்றிலுமாக மறுத்துவிட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட அந்த பாயிண்டிற்குச் சென்றால்தான் மீடியாாக்களுக்குச் சரியான கவரேஜ் கிடைக்கும் என்றும், மைக் சத்தம் சரியாகக் கேட்காது என்றும் கூறி ஆர்கனைசர்கள் பிடிவாதமாக வாகனத்தை முன்னோக்கி நகர்த்தியுள்ளனர். அதன் காரணமாகவே, அங்கிருந்த வண்டியை மேலும் புஷ் செய்து, கூட்டத்தை இருபுறமும் நகர்த்தி வாகனத்தை உள்ளே கொண்டு வந்தபோதுதான் அந்த எதிர்பாராத நெரிசலும் விபத்தும் அரங்கேறியுள்ளது. காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே இருந்து எச்சரித்த பிறகும், விளம்பர வெளிச்சத்திற்காகவும் கவரேஜிற்காகவும் ஆர்கனைசர்கள் அதை கேட்காமல் மறுத்ததே உண்மை எனப் போலீஸ் தரப்பு விளக்கம் தெளிவாகக் கூறும் நிலையில், தற்போது முதல்வர் விஜய் போலீஸ் மீது பழி சுமத்துவது ஏன் என்று அரசியல் விமர்சகர்களும் நெட்டிசன்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.





