சின்னத்திரையின் மிகப்பெரிய பிரம்மாண்ட நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 10-ஐத் தொகுத்து வழங்கி வரும் நடிகர் விஜய் சேதுபதி, வார இறுதி எபிசோடில் போட்டியாளர் ஒருவருக்கு வழங்கி அறிவுரை தற்பொழுது தமிழக அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் மிகப்பெரிய புயலைக் கிளப்பியுள்ளது.
பிக்பாஸ் வீட்டின் தலைவர் பதவியையும் ஜனநாயகத்தையும் மையமாகக் கொண்டு விஜய் சேதுபதி ஆற்றிய உரை, முழுக்க முழுக்கத் தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான சி. ஜோசப் விஜய்யைத்தான் மறைமுகமாகத் தாக்குகிறது என நெட்டிசன்கள் வாதாடத் தொடங்கியுள்ளதால் இணையமே போர்க்களமாக மாறியுள்ளது.
Host #VijaySethupathi’s Speech In #BiggBossTamil10 👀.
Is this just a Bigg Boss house discussion… or did Vijay Sethupathi indirectly touch upon the current political scenario in Tamil Nadu? 👀🔥.
The way he questioned the captaincy, opposition and the functioning of the…
— FilmyBowl Tamil (@FilmyBowlTamil) September 12, 2026
அந்த எபிசோடில் வீட்டுத் தலைவரின் செயல்பாடுகள் குறித்துக் கடுமையான விவாதத்தை முன்னெடுத்த விஜய் சேதுபதி, “தலைவன் என்றால் என்னவென்றே தெரியாமல், தலைமைத்துவத்துக்கான அடிப்படைத் தகுதியே இல்லாமல், மேடைக்கு மேடை வாய்க்கு வந்த வாக்குறுதிகளை அள்ளிக் கொடுத்துவிட்டு, நிஜமாகப் பொறுப்புகளும் பிரச்சனைகளும் வரும்போது பழியை மற்றவர்கள் மீது தூக்கிப் போட்டுவிட்டு அங்கிருந்து தெறித்து ஓடுவது ஒரு தலைவனுக்கு அழகல்ல. அதெல்லாம் சுத்த ஏமாற்று வேலை” என மிகக் காரசாரமான வார்த்தைகளால் பொங்கிப் படைத்தார்.
விஜய் சேதுபதியின் இந்த ஆவேசப் பேச்சு அடங்கிய வீடியோ துண்டு சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போலப் பரவிய உடனே, தமிழக வெற்றி கழகத் தொண்டர்களும் முதலமைச்சர் விஜய்யின் தீவிர ரசிகர்களும் கொதித்தெழுந்து களமிறங்கியுள்ளனர். நெருக்கடியான சூழல்களில் முதலமைச்சர் விஜய் மேற்கொண்ட நடவடிக்கைகளையும், அரசியல் களத்தில் அவர் சந்திக்கும் விமர்சனங்களையும் சுட்டிக்காட்டித்தான் விஜய் சேதுபதி தன் தனிப்பட்ட வன்மத்தைக் கக்கியுள்ளார் என குற்றம் சாட்டி வரும் தவெக ஆதரவாளர்கள், சமூக வலைத்தளங்களில் விஜய் சேதுபதிக்கு எதிராகக் கடுமையான எதிர்ப்பைப் பதிவிட்டு வருகின்றனர். பிக்பாஸ் மேடையை அரசியல் தாக்குதலுக்கான களமாகப் பயன்படுத்தியதாக எழுந்துள்ள இந்த சர்ச்சை, கோலிவுட்டையும் அரசியல் மேடைகளையும் ஒரே நேரத்தில் ரணகளமாக்கியுள்ளது.





